Tuesday, 28 December 2010

விடா முயற்சி 
உறைந்து கிடந்தேன் உணர்வில்லாமல் 
ஊக்கம் எடுத்தும் உயர்வில்லையே என்று - ஆயினும் 
உயிர்ர்ப்பு உறையவில்லை என் உணர்வில் 


விடாது தொடர்ந்தீன் விடியளிக்கான தேடலை 
விரைவில் கிட்டவில்லை வெளிச்சத்தின் விளிம்பு 
வெகு தூரம் தொடர்ந்தேன் வெற்றிக்கான காழ்ப்புடன்

விடியலின் வெள்ளி வெளிப்பட்டது ஈற்றில் 
வியந்தேன் என் வெளிப்பாட்டைக் கண்டு
 விழிப்புடன் செல்கிறேன் வழி நீண்ட பயணத்துக்காய் 


விடா முயற்சி பலன் தரும் என்பது 
வெற்று மொழியல்ல நம்பிக்கையின் பலம் 
பலத்தின் பயன் விடியலின் வெற்றி 

2 comments: